மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரத்தைக் குறைக்க கோரிக்கை!

பெட்ரோல் நிலையங்களின் வேலை நேரத்தைக் குறைக்க கோரிக்கை!

ஊரடங்கு காலத்தில், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பெட்ரோலிய உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க், ஏடிஎம், உள்ளிட்டவை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் திறந்து இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் வருவார்கள்.

பல பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரியும் ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மற்ற ஊழியர்கள் வேலைக்கு வர தயங்குகின்றனர். எனவே, பெட்ரோல் பங்க்குகள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் அத்தியாவசிய, அவசர சேவைகளுக்கு முழு நேரம் செயல்படலாம்.

பொது மக்களுக்கான விற்பனை நேரத்தை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை என வரையறுக்க வேண்டும். இதனால், தேவையற்ற போக்குவரத்து, தொற்று பரவல் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படுவதையும் கட்டுப்படுத்தலாம். இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 24 மே 2021