மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

சென்னை ஏரிகளின் நீர்மட்டம்: குடிநீர் பஞ்சமிருக்காது!

சென்னை ஏரிகளின் நீர்மட்டம்: குடிநீர் பஞ்சமிருக்காது!

வெப்ப சலனம் காரணமாக பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் சென்னை குடிநீருக்குப் பஞ்சமிருக்காது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை ஆகிய ஐந்து ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 578 மில்லியன் கன அடியாகவும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 656 மில்லியன் கன அடியாகவும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2,886 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3,028 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தில் 436 மில்லியன் கன அடியாகவும் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 16 மி.மீ, செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 30 மி.மீ, புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 18 மி.மீ, சோழவரம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 765 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர்த்து பூண்டி ஏரிக்கு 10 கன அடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 11.75 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஐந்து ஏரிகளிலும் 7.58 டிஎம்சியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஏரிகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆண்டு சென்னை குடிநீருக்குப் பஞ்சமிருக்காது என்றும் சென்னை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

-ராஜ்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

திங்கள் 24 மே 2021