மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி!

மத்திய அரசு தமிழகத்திற்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிற நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தடுப்பூசி போடும் மையங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர்களிடம் கேட்கும்போது, தமிழகத்துக்கு எந்தளவு தடுப்பூசி ஒதுக்கப்படுகிறதோ, அதன் அடிப்படையில்தான் தடுப்பூசி மக்களுக்கு போடப்படுகிறது என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தடுப்பூசி, மருந்து பற்றாக்குறை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகின்றது. இன்று(மே 24) இந்த வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் சுகாதார துறை செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இந்திய அளவில் தமிழகத்தில் தான் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இருந்து 146 டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவை முழுமையாக கிடைக்கவில்லை. யாஸ் புயல் நெருங்கி வருவதால் ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு குறைவான அளவில், மத்திய அரசு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தடுப்பூசி நிறுவனங்களிலிருந்து மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய இயலாத நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.

யாஸ் புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை பாதிக்கும் என்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 24 மே 2021