மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

ரிலாக்ஸ் டைம்: கோல்டன் டிரிங்க்

ரிலாக்ஸ் டைம்: கோல்டன் டிரிங்க்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான், நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம். நோய் எதிர்ப்பு சக்தியை மாத்திரை, மருந்துகளால் மட்டும் பெற முடியாது. சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, போதுமான அளவு தூங்குவது, சரியான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, உடல் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வது போன்றவற்றாலும் பெறலாம். அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கோல்டன் டிரிங்க் பெரிதும் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு டம்ளர் பாலை காய்ச்சி, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப பனை சர்க்கரை, நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவில் கலந்த திரிகடுகப்பொடி 10 மில்லிகிராம் கலந்து தினமும் அருந்தலாம்.

சிறப்பு

சளி, காய்ச்சல் இருப்பவர்கள் குடித்துவர, காய்ச்சல் குணமாகும். சளித் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். சுக்கு, கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தம் கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளும். விஷத்தை முறிக்கும் சக்தி மிளகுக்கு உண்டு. உடலில் உள்ள தொற்றுகளை நீக்கும்.

திப்பிலி, நுரையீரலில் உள்ள சளியைப் போக்கும். இளைப்பு பிரச்னை (Wheezing) சரியாகும். வயிற்றில், பசிக்காக சுரக்கும் என்சைம்களை சீராக சுரக்கவைக்கும்.

கல்லீரல் பாதிப்பைச் சரியாக்கும். சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பாலை கொடுத்துவர, பசியைத் தூண்டி, உணவைச் சாப்பிடத் தூண்டும்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 24 மே 2021