மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 மே 2021

விவசாயிகள் காய்கறிகளை எங்கே விற்பது?

விவசாயிகள் காய்கறிகளை எங்கே விற்பது?

காய்கறி,பழங்களை உற்பத்தி செய்யும் வியாபாரிகள் அதை எங்கு கொண்டு சென்று விற்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனால், காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்கும் வகையில் வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இது மக்களுக்கு நல்ல பலனை தந்தாலும், விளைபொருட்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால், காய்கறி, பழங்களை விளைவித்து உற்பத்தி செய்யும் வியாபாரிகள், அதை எங்கு விற்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். பழங்கள், வாழை இலை, காய்கறி உள்ளிட்டவை அறுவை செய்யப்பட்ட சிறிது நேரத்திலே விற்கப்பட வேண்டும். அழுகக் கூடிய தன்மைக் கொண்ட காய்கறி, பழங்களை நீண்ட நேரம் வைத்திருக்கவும் முடியாது. அப்படியே குளிர்பதன கிடங்கில் வைக்க வசதி இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் அன்றாடம் விற்கப்படும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்துகிறார்கள். அதனால், விவசாயிகள் உடனடியாக காய்கறிகளை விற்க கூடிய நிலையில் இருக்கின்றனர்.

விவசாயிகள் தங்களது விளைப்பொருள்களை வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைக்குழு அலுவலர்களைத் தொடர்புக் கொண்டு பொருட்களை விற்பனை செய்யலாம். அதற்கான தொடர்பு எண்களையும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புக்கொள்ளும்போது, அவர்கள் வேறு ஒருவருக்கு கால் செய்ய சொல்கிறார்கள் அல்லது காய்கறிகளை கொண்டு செல்ல இ-பதிவு பெற வேண்டும் என்கிறார்கள். இ-பதிவு பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகளை கூறுகிறார்கள். அப்படியே இ-பதிவு பெற்றாலும், மொத்த விற்பனை நிலையங்கள் எல்லாம் அடைக்கப்பட்டுள்ள நிலையில், எங்கே கொண்டு போய் விற்பது என விவசாயிகள் புலம்புகின்றனர்.

ஒரு திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு, அதற்கான திட்டமிடல் சரியாக இருக்க வேண்டும். சரியாக திட்டமிடாமல் திட்டங்களை செயல்முறை படுத்தினால் இதுபோன்ற சிக்கல்கள்தான் வரும் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 24 மே 2021