மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் வைகை அணை திறக்க வாய்ப்பு!

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் வைகை அணை திறக்க வாய்ப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டி உள்ளதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் முதல் வாரம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து 60 அடிக்கும் மேல் நிரம்பி காட்சியளிக்கிறது.

வைகை அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் போதுமான அளவில் நீர்இருப்பு இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடைசியாக 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியை எட்டி உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதன்படி வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக கால்வாய் வழியாக விநாடிக்கு 900 கனஅடி தண்ணீர் 120 நாட்களுக்கு திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று (மே 22) காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 64.83 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 968 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் மொத்தம் 4, 593 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

-ராஜ்

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

ஞாயிறு 23 மே 2021