மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

வீட்டிலேயே ஊட்டி மலர் கண்காட்சி!

வீட்டிலேயே ஊட்டி மலர் கண்காட்சி!

கொரோனா பொது முடக்கம் காரணமாக மக்கள் வீட்டிலிருந்தே ஊட்டி மலர் கண்காட்சியை இணைய வழியில் கண்டு ரசிக்கும் திட்டத்தைத் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார்.

சர்வதேச சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோடை விழா நேரத்தில் நூற்றாண்டுகளைக் கடந்து நடத்தப்பட்டுவரும் ஊட்டி மலர் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனைதிரவிய கண்காட்சி என ஒரு மாதத்துக்கு விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் முடங்கிக்கிடக்கும் மக்கள் தங்களின் மன இறுக்கத்தைப் போக்கும் முயற்சியாக ஒரே நேரத்தில் சுமார் 5 லட்சம் மலர்ச்செடிகளை இணைய வழியில் கண்டு ரசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாட்டினை நீலகிரி தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தத் திட்டத்தை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், இதைத் தொடங்கி வைத்து. இணைய வழியில் காணும் லிங்கையும் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், “கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இம்முறையும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக உள்ளதால் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மக்களும் இந்த மலர் அலங்காரங்களை இணைய வழியில் காணும் ஏற்பாட்டை தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

230 ரகங்களில் 35,000 பூந்தொட்டிகளில் வண்ண மலர்கள் பூத்துள்ளன. இது தவிர ஒரே இடத்தில சுமார் 5 லட்சம் மலர்ச்செடிகள் பூத்துள்ள மலர்களை கண்டு ரசிக்க முடியும். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வெளியில் வராமல் இணைய வழி மூலமாக இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 23 மே 2021