மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

ஊரடங்கு : சென்னை காவல்துறை எச்சரிக்கை!

ஊரடங்கு : சென்னை காவல்துறை எச்சரிக்கை!

ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அவை நீதிமன்றங்கள் மூலமே திரும்பி ஒப்படைக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் தளர்வின்றி முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால், அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்யவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் 20 ஆயிரம் போலீசார்கள் ஈடுபடவுள்ளனர். 320 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படும். மேலும் சென்னையில் நாளை முதல் இணைப்பு சாலைகள், சிறிய சாலைகள், மேம்பாலங்கள் மூடப்படும்.

ஊரடங்கை மீறி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவை நீதிமன்றங்கள் மூலமே திரும்பி ஒப்படைக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 23 மே 2021