மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

நடுவானில் நடந்த திருமணம்!

நடுவானில் நடந்த திருமணம்!

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, உறவினர்கள் மத்தியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர் மதுரையைச் சேர்ந்த புதுமண தம்பதி.

நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமணங்கள் அனைத்தும் இன்றே அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை தொழிலதிபர் மகன் ராகேஷ், மதுரை தொழிலதிபர் மகள் தீச்சனா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டனர். அதன்படி, மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு முன்பதிவு செய்து, அதில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இன்று காலை 7.30 மணியளவில் அந்த விமானம் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் மணமகன் மணமகன் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் 161 பேர் பயணித்தனர். திருமணத்திற்காக விமானத்தில் சென்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தான் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர். விமானம் பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன் ராகேஷ் மணமகள் தீச்சனாவுக்கு மாலை மாற்றி, தாலி கட்டி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தூத்துக்குடிக்கு சென்ற விமானம் மீண்டும் காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

நீருக்கடியில் திருமணம், பாராசூட்டில் பறந்து கொண்டு திருமணம் என்ற வரிசையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் நடந்த திருமணமும் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

-வினிதா*

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 23 மே 2021