மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

ஊரடங்கு : நெல்லையில் அவசர திருமணங்கள்!

ஊரடங்கு : நெல்லையில் அவசர திருமணங்கள்!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்தவாரம் நடக்கவிருந்த திருமணங்கள் அனைத்தும் இன்று அவசர அவசரமாக நடைபெற்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி, இ-பதிவு முறையில் இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கான பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்படுவதால், திருமணத்திற்கு தேவையான பூ, பழங்கள் உட்பட பல பொருட்களை வாங்க முடியாத சூழலும் ஏற்படும்.

வரும் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் கல்யாண முகூர்த்த நாள் என்பதால், அந்த தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் அதிகமான ஜோடிகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலரும் அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமண தேதியை மாற்றி இன்று அவசர அவசரமாக ஏற்பாடுகளை செய்து திருமணத்தை நடத்தினர்.

நெல்லையில், சாலைகுமரன் கோயில் , சுப்பிரமணிய கோயில் உள்ளிட்ட கோயில்களில் இன்று காலை 6 மணியிலிருந்தே பல்வேறு திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. நெல்லையில் 31ஆம் தேதிவரை நடக்கவிருந்த 17 திருமணங்கள் இன்று நடைபெற்றன.

அவசர திருமணம் குறித்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டதாகவும், உடனே திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டதாகவும் மணமக்கள் கூறுகின்றனர். தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில் அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமணத்தை இன்று சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து திருமணம் செய்து கொண்டதாக திருமண ஜோடிகள் கூறுகின்றனர்.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 23 மே 2021