மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை!

காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் ஓய்வில்லாமல் கொரோனா பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தொற்றுக்கும் பலியாகி வருகின்றனர். இதனால், மனதளவிலும், உடலளவிலும் அவர்களுக்கு சோர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரவு பகலாக சாலைகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு எந்தவித சலுகையும், விடுமுறையும் கிடையாது என காவலர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் 36 குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.

காவலர்களுக்கு சலுகை, விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, மின்னம்பலத்தில் [பணியில் இறக்கும் போலீஸ் குடும்பத்துக்கு 25 லட்சம், அரசு வேலை!- கூடுதல் டிஜிபி பேட்டி!] என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், தமிழக டிஜிபி திரிபாதி நேற்றிரவு(மே 22) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால், அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, சுழற்சி முறையில் 20 சதவிகித காவலர்களுக்கு விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை விடுமுறை வழங்கப்படும். வாரத்தில் 5 நாட்கள் வேலை பார்த்தால் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 23 மே 2021