மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 23 மே 2021

தளர்வுகளைப் பயன்படுத்தி வெளியே சுற்றக் கூடாது!

தளர்வுகளைப் பயன்படுத்தி வெளியே சுற்றக் கூடாது!

தளர்வுகளைப் பயன்படுத்தி மக்கள் தேவையின்றி வெளியே சுற்றக் கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

நாளை முதல் தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. தளர்வுகள் இல்லாத இந்த ஊரடங்கில் காய்கறி, மளிகைக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதால், நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இன்றும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முழு ஊரடங்கின்போது வங்கி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியிருந்த நிலையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் வங்கிகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒரு வாரம் முழு ஊரடங்கு என்பதால், மக்கள் அனைவரும் நேற்று முதலே காய்கறி, மளிகை சாமான்கள் என ஒரு வாரத்துக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க கடைகளில் குவிந்தனர். ஒரு சிலர் தேவைக்கு அதிகமாகவும் வாங்கி வருவதை காண முடிகிறது.

அதனால், இன்று முழுவதும் கடைகள் திறந்திருக்கும். அச்சத்தில் மக்கள் ஒரே நேரத்தில் கடைகளில் குவிய வேண்டாம். மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். தளர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் தேவையின்றி வெளியே சுற்றக் கூடாது.

அதேசமயம், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

ஞாயிறு 23 மே 2021