மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

புயல்: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை!

புயல்: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நான்கு கடலோர மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. சென்னையில் நேற்றும் நேற்று முன்தினமும் பல இடங்களில் மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் சூறைகாற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்” என கூறியுள்ளது.

மேலும், “உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். ஐந்து கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் எதிர்பார்க்கலாம்” என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடக்கு அந்தமான் கடலில் இன்று (மே 22) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். 26ஆம் தேதி காலையில் ஒடிசா - மேற்கு வங்காளம் இடையே புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களில் போதிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்தமான் தீவுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவு நிர்வாகி ஆகியோருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், புயல் பாதிப்பு உள்ள இடங்களை கண்டறிந்து, அங்குள்ள கொரோனா சிறப்பு முகாம்களில் உள்ள நோயாளிகளை மீட்டு வேறு முகாமுக்கு மாற்ற வேண்டும். கடலோர மாவட்டங்களில் சுகாதார வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் மின்சாரம், தண்ணீர், எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

சனி 22 மே 2021