மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

கிச்சன் கீர்த்தனா: தக்காளித் தொக்கு

கிச்சன் கீர்த்தனா: தக்காளித் தொக்கு

தற்போதைய சூழ்நிலையில் விலை மலிவாகக் கிடைக்கிறது தக்காளி. லாக்டெளன் நேரத்தில் மதிய சாப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கும் இந்தத் தக்காளித் தொக்கு கைகொடுக்கும். மதியம் சாப்பாட்டுக்கு மட்டுமல்ல; காலை, இரவு நேர டிபன் வகைகளுக்கும் இந்த தக்காளித் தொக்கு உதவும். தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து.

என்ன தேவை?

தக்காளி - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கடுகு - அரை டீஸ்பூன்

பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இறுதியாக வெல்லம் சேர்த்து, கலவை சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். ஆறியதும் பாட்டிலில் சேகரிக்கவும். தேவையானபோது எடுத்துப் பயன்படுத்தவும்.

நேற்றைய ரெசிப்பி : மாங்காய் இஞ்சித் தொக்கு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 22 மே 2021