மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

ஆம்புலன்சில் பற்றிய தீ!

ஆம்புலன்சில் பற்றிய தீ!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ’108’ ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகளவு பரவி வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மருத்துவமனைகளுக்கு வெளியே நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை உள்ளது

இந்த சூழலில் கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஆம்புலன்ஸ் வந்ததும் நோயாளியை பணியாளர்கள் அழைத்துச் சென்றதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அவரை அழைத்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆம்புலன்ஸில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். வாகனத்திலிருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இதுபோன்று இனி நடக்காமல் இருக்க ஆம்புலன்ஸில் ஏற்பட்டிருக்கும் பழுதுகளைச் சரி செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக வலைதளவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

-பிரியா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 22 மே 2021