மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 22 மே 2021

கொரோனா இரண்டாம் அலைக்கு பலியாகும் மருத்துவர்கள்!

கொரோனா இரண்டாம் அலைக்கு பலியாகும் மருத்துவர்கள்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் 420 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், தினசரி உயிரிழப்பு தொடர்ந்து நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் முன்கள பணியாளர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

”தொற்றுநோயின் இரண்டாவது அலை அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது, குறிப்பாக முன்னணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது "என்று ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் வாரத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா இரண்டாம் அலையில் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு டெல்லியில் மட்டும் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்தபடியாக பிகாரில் 96 மருத்துவர்களும், உத்தரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31 மருத்துவர்களும், மகாராஷ்டிராவில் 15 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களில், கொரோனா காரணமாக சராசரியாக ஒருநாளைக்கு 20 மருத்துவர்கள் உயிரிழக்கின்றனர்.

2020 ஆம் ஆண்டில் முதல் அலையின் போது, இந்தியாவில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தற்போதுவரை, 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்திய மருத்துவ சங்கத்திடம், 3.5 லட்சம் உறுப்பினர்களின் பதிவு மட்டுமே இருப்பதால், மருத்துவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

சனி 22 மே 2021