மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை!

வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர், பொத்தனூர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிகளில் கொரோனா பரவலைத் தடுக்க வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாங்கி செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மேலும் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக காலையில் மளிகை, காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடைகளில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் பொருட்களை வாங்கி செல்வதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பரமத்திவேலூர் பேரூராட்சியில் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்யும் பணியை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் உழவர் சந்தை விவசாயிகள் வீதி, வீதியாகச் சென்று காய்கறிகளை விற்பனை செய்தனர்.

இதேபோல் பொத்தனூர் பேரூராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் பணியைச் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாமகிரிப்பேட்டை பேரூராட்சியிலும் கடைகளில் பொதுமக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உழவர் சந்தை விவசாயிகள் வீதி, வீதியாக சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்தனர். வாகனங்களில் கொண்டு வரப்படும் காய்கறிகளைப் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து வாங்கி செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

“காலை வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் கடைவீதிக்குச் சென்று முண்டியடித்து பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கும் இந்த முறை எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது” என்று அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 21 மே 2021