மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

வாட்ஸ்அப்பின் புதிய கொள்கை: வாபஸ் பெற 7 நாள் கெடு!

வாட்ஸ்அப்பின் புதிய கொள்கை: வாபஸ் பெற 7 நாள் கெடு!

வாட்ஸ்அப் கொண்டுவரவிருக்கும் புதிய கொள்கையை வாபஸ் பெற மத்திய அரசு 7 நாள் கெடு விதித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் புதிய தனிநபர் கொள்கையை வகுத்துள்ளது. ஏற்காத பயனர்களுக்கு, சேவைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் புதிய கொள்கைகளால் தாங்கள் அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை, அந்தரங்கம் குறித்து பயனர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தனிப்பட்ட உரையாடல்கள் அனைத்துமே பாதுகாப்பானவை. வாட்ஸ்அப் தரப்பு உள்ளிட்ட மூன்றாம் நபர் யாரும் இதைப் படிக்கவோ, கேட்கவோ முடியாது என வாட்ஸ் அப் கடந்த வாரம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனமானது தனது புதிய தனியுரிமை கொள்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் தொடர்பாக 7 நாளில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ்அப் புதிய கொள்கைகளை அறிமுகம் செய்ததிலிருந்தே அதைச் சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்தன. இதனால் இந்த விதிகள் அமல் ஆகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள், அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து கேள்வி எழுந்தது. சமீபத்தில் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடந்தது.

"தங்கள் தனியுரிமை பறிபோவது குறித்து மக்களுக்குப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் 2 அல்லது 3 ட்ரில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு உங்கள் பணத்தைவிட அவர்களின் தனியுரிமை முக்கியம். அதை நாம் காக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வெள்ளி 21 மே 2021