மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

லாட்டரியில் கோடீஸ்வரரானவர் கொரோனாவால் பலி!

லாட்டரியில் கோடீஸ்வரரானவர் கொரோனாவால் பலி!

லாட்டரி பரிசாக ஒரு கோடி பெற்ற முதியவர், பரிசுத் தொகையை அனுபவிக்கும் முன் கொரோனாவால் பலியான சோகம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாளாபள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயது அப்துல் காதர். இவர் அந்தப் பகுதியில் ஒரு சலூன் கடை நடத்தி வந்தார்.

அப்துல் காதர் தினமும் 200 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர் வாங்கிய கேரள அரசின் பாக்யமித்ரா என்ற லாட்டரியில் முதல் பரிசான ஒரு கோடி ரூபாய் கிடைத்தது.

லாட்டரியில் பரிசு கிடைத்தவுடன், வாடகை வீட்டில் வசித்து வரும் தான், ஒரு புதிய வீடு வாங்கப் போவதாகவும் கடன்களை அடைத்து நிம்மதியாக வாழ திட்டமிட்டுள்ளதாகவும் அப்துல் காதர் கூறியிருந்தார். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று (மே 20) திடீர் மாரடைப்பு ஏற்பட்டதில் அப்துல் காதர் மரணம் அடைந்தார். பரிசுத் தொகையை அனுபவிக்கும் முன் இரண்டு மாதங்களில் கொரோனாவால் காதர் பலியானது அந்தப் பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 21 மே 2021