மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம்!

மின் கட்டணத்தை மக்களே கணக்கீடு செய்யலாம்!

மே மாதத்துக்கான மின் கட்டணத்தைப் பொதுமக்களே கணக்கிட்டு இணையவழியில் செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வழக்கமாக மின்வாரியத்தைச் சேர்ந்த ஊழியர் வீடு வீடாக சென்று மின் நுகர்வைக் கணக்கெடுத்துச் செல்வார். தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடு வீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால், பொதுமக்களே தங்களது மின் கட்டணத்தைச் சுயமாகக் கணக்கீடு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே மாதத்துக்கான மின் கட்டணத்தை மக்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் மின் மீட்டரில் உள்ள கணக்கை புகைப்படம் எடுத்து, வாட்ஸ்அப் அல்லது இ-மெயில் வாயிலாக மின்வாரிய உதவிப் பொறியாளரின் கைபேசி, இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். மக்கள் அனுப்பிய விவரங்களைச் சரிபார்த்து, 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள கணக்கீட்டுக்கான கட்டணத் தொகை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் அல்லது இ-மெயில் மூலமாக சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி அனுப்புவார். அதன்பின்பு, மக்கள் மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம்.

மே மாதத்துக்கான மின் கட்டணம் ஏற்கெனவே கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை மின்வாரிய உதவி பொறியாளர்கள் நீக்கிவிடுவார்கள்.

பொதுமக்களின் சுய கணக்கீட்டு விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, தேவை ஏற்பட்டாலோ மின்வாரிய அலுவலர்கள் வீட்டுக்கு வந்து கணக்கீடு செய்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 21 மே 2021