மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

சென்னையில் மழை தொடருமா?

சென்னையில் மழை தொடருமா?

தமிழகத்திலும் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை கடந்த வாரங்களில் மழை பெய்துள்ள நிலையில் , நேற்று (மே 20) மாலை சென்னையிலும் வானம் இருட்டியது. பல இடங்களில் மழை பெய்தது. இந்த நிலை தொடருமா என்பது வெப்பம் மிகுந்த சென்னைவாசிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

கடந்த சில நாட்களாகவே டவ் தே புயல் காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை, புயல் என இயற்கை சீற்றம் தொடங்கியது. தமிழகத்திலும் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை கடந்த வாரங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று (மே 20) மாலை சென்னையிலும் வானம் இருட்டியது. பல இடங்களில் லேசான மழை பெய்தது.

‘இந்த நிலை தொடருமா? டவ் தே புயல் காரணமாக இது ஏற்பட்டதா? எவ்வளவு நாள் மழை இருக்கும்?’ என்ற கேள்விகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் பதில் அளித்துள்ளார்.

“இந்த மழைக்கு வெப்பச்சலனம்தான் காரணம். நேற்று (மே 20) சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்தது..

இன்று (மே 21) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (மே 22) அன்று மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

23 மற்றும் 24ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் நாளை (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. 24ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி ஒரிசா கடற்கரைக்கும் மேற்குவங்க கடற்கரைக்கும் இடையே கரையை கடக்க கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு நாளை (மே 22) முதல் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 21 மே 2021