மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 21 மே 2021

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் இஞ்சித் தொக்கு

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் இஞ்சித் தொக்கு

பார்ப்பதற்கு இஞ்சியின் சாயலிலும், வாசனையில் மாங்காயின் மணத்தையும் கொண்டது மாங்காய் இஞ்சி. அதனால்தான் அதற்கு இப்படியொரு வித்தியாசமான பெயர். மஞ்சள், இஞ்சி போல் மாங்காய் இஞ்சியும் சிறந்த மருத்துவப் பயனைக் கொண்டது. சரும நோய்களைக் குணப்படுத்தவும், இருமல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும், ஜுரம், விக்கல், காதுவலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் ஆயுர்வேதத்தில் மாங்காய் இஞ்சி பயன்படுகிறது. முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மாங்காய் இஞ்சித் தொக்கு உதவும்.

என்ன தேவை?

மாங்காய் இஞ்சி - கால் கிலோ (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)

எலுமிச்சைப்பழம் - 2 (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்)

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள், வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன்

கடுகு - முக்கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காய் இஞ்சியுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தொக்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி : பிரண்டைத் தொக்கு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வெள்ளி 21 மே 2021