மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

கொரோனாவைப் போல் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை!

கொரோனாவைப் போல் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை!

சென்னையில் கொரோனாவைப் போல் தினமும் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. சவரன் ரூ.16 உயர்ந்து ரூ.36,616-க்கு விற்பனையாகிறது.

இந்த வருட தொடக்கம் முதலே தங்கத்தின் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

தங்கம் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில்கூட தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 19) சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,616-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.50-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ. 77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதும் தங்கத்தின் விலையேற்றத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

வியாழன் 20 மே 2021