மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

தபால்துறை ஓய்வூதியம்: ஆன்-லைனில் புகார் தெரிவிக்கலாம்!

தபால்துறை ஓய்வூதியம்: ஆன்-லைனில் புகார் தெரிவிக்கலாம்!

ஊரடங்கால் ஓய்வூதியர் சிரமத்தைத் தவிர்க்க தபால்துறை சார்பில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி தபால்துறை சார்பில் ஓய்வூதியம் பெறுவோர் ஆன்-லைனில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேற்கு அஞ்சல் மண்டலம் சார்பில் ஓய்வூதியம் பெறுவோருக்கான குறை தீர்க்கும் கூட்டம் இந்த மாதம் (மே மாதம்) கடைசி வாரத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தபால் அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தில் தீர்க்கப்படாத குறைகள் இருப்பின், கோட்ட அதிகாரி அளித்த பதிலையும் வைத்து தங்கள் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தபால் மூலமாக (Pension Adalat - பென்சன் அதாலத் எனக் குறிப்பிட்டு) கணக்கு அதிகாரி, மேற்கு அஞ்சல் மண்டல அலுவலகம், கோவை-2 என்ற முகவரிக்கு நாளை (மே 20) வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பலாம் அல்லது [email protected] என்ற மின்அஞ்சலுக்கு Pension Adalat என்று குறிப்பிட்டு அனுப்பலாம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ஓய்வூதியர்கள் பிரச்சினைகள், குறைகளைக் கேட்டறிய மற்றும் விவாதிக்க ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் சாத்தியம் இல்லை. எனவே அனைத்து பிரச்சினைகள், குறைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, ஓய்வூதியர்களுக்கு உரிய பதில், தபால் மூலம் தெரிவிக்கப்படும் என்று சேலம் மேற்கு கோட்ட தபால் அலுவலகங்களின் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 20 மே 2021