மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

கொரோனா தொடர்பான அரசாணைகளை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!

கொரோனா தொடர்பான அரசாணைகளை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!

தமிழக அரசின் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகளை வெளியிடுவதற்காகத் தமிழக அரசின் இணையதளம் உள்ளது. கொரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட ஸ்டாப் கொரோனா என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை. 2021ஆம் ஆண்டு தொடங்கியது முதல் மே 12ஆம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஐந்து மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமில்லாமல் பிற அறிவிப்புகளும், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை இன்று(மே 20) நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் அனைத்தும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பது குறித்து பிற்பகலில் தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு விளக்கமளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.

பிற்பகலில் இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அப்போது, கடந்த 18ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட அனைத்து அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கொரோனா தொடர்பான அரசின் அனைத்து அரசாணை, அறிவிப்பாணைகளை அரசின் இணையதளத்திலும், ஸ்டாப் கொரோனா இணையத்திலும் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 20 மே 2021