மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

பெண் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்!

பெண் பயணிகளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்!

பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற திட்டமும் ஒன்று. மறுநாளே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெண்கள் இலவசப் பயணம் தொடர்பாக போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை அரசு செயலாளர் ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில்,

பேருந்து நிறுத்தத்தில், ஒரு பயணி நின்றாலும் அவருக்காக பேருந்தை நிறுத்தி அந்தப் பயணியை ஏற்றிச்செல்ல வேண்டும்.

பெண் பயணிகளிடம் அன்புடனும், கனிவுடனும் நடந்துகொள்ள வேண்டும்.

வயது முதிர்ந்த பெண்கள் இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும்.

பெண்களிடம் எரிச்சலூட்டும் வகையிலோ, கோபமாகவோ, இழிவாகவோ, ஏளனமாகவோ பேசக்கூடாது.

பெண்கள் பேருந்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்காணித்து பாதுகாப்பாக ஏறி, இறங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்துக்கு முன்போ அல்லது அதை தாண்டியோ பேருந்தை நிறுத்தக் கூடாது.

பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பல்வேறு வகையிலான தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

பேருந்தில் ஏற வரும் பெண்ணை, இடமில்லை என்று கூறி இறக்கிவிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 20 மே 2021