மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 20 மே 2021

கிச்சன் கீர்த்தனா: பிரண்டைத் தொக்கு

கிச்சன் கீர்த்தனா: பிரண்டைத் தொக்கு

மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் பிரண்டைத் தொக்கு செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். இந்தத் தொக்கை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

என்ன தேவை?

நார் எடுத்து சுத்தம் செய்த இளம் பிரண்டைத்துண்டுகள் - ஒரு கப்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, பிரண்டை சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடங்கள் வரை வதக்கவும். (அப்போதுதான் பிரண்டையின் அரிப்புத் தன்மை போகும்). இதனுடன் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி : இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

வியாழன் 20 மே 2021