மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

ஏற்காடு: இந்த ஆண்டும் கோடை விழா ரத்து?

ஏற்காடு: இந்த ஆண்டும் கோடை விழா ரத்து?

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக இந்த ஆண்டும் ஏற்காடு கோடை விழா ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது உண்டு. அங்குள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டு ரசிப்பார்கள்.

ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்தக் கண்காட்சியின்போது பல வகையான மலர்களால் பல விலங்குகள், பறவைகள் அலங்கரித்து காட்சிக்கு வைக்கப்படும்.

மேலும், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளும், நாய் கண்காட்சி, சுற்றுலா பயணிகளுக்கு படகுப்போட்டி, பாரம்பரிய சமையல் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படும். 2 அல்லது 3 நாட்கள் நடத்தப்படும் இந்த மலர் கண்காட்சியை சேலம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கண்டு களிப்பார்கள்.

ஆனால், கடந்த ஆண்டு பரவல் காரணமாக ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படவில்லை இதனால் சேலம் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாலும், முழு ஊரடங்கு அமலில் இருப்பதாலும் இந்த ஆண்டும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று குறைந்திருந்த காரணத்தால் ஏற்காட்டில் மலர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. அங்கு ரோஜா செடிகளை வளர்க்கும் பணியில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். தற்போது ரோஜா, மேரி கோல்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்கி வந்தாலும் செடிகளில் மலர்ந்து காணப்படுகிறது.

ஏற்காட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு 44ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு வருகிற 24ஆம் தேதி வரை அமலில் உள்ளதால் ஏற்காட்டில் இந்தாண்டும் கோடை விழா மற்றும் மலர்க் காட்சி நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

-ராஜ்

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 19 மே 2021