மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

75 சதவிகித லாரிகள் நிறுத்தம்; ரூ.560 கோடி இழப்பு!

75 சதவிகித லாரிகள் நிறுத்தம்; ரூ.560 கோடி இழப்பு!

கடந்த 10 நாட்களில் 75 சதவிகித லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, “தமிழக அரசு சரக்கு வாகனங்களைத் தடையின்றி இயக்கலாம் என அறிவித்து இருந்தாலும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் போதிய லோடு கிடைப்பது இல்லை.

இதனால் தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள நான்கரை லட்சம் லாரிகளில் 25 சதவிகித லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 75 சதவிகித லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.56 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.560 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் 7 லட்சம் டிரைவர், கிளீனர் உள்பட மொத்தம் 14 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் லாரி தொழிலைப் பாதுகாக்க நலவாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களைப் பாதுகாக்க ஆறு மாதக் காலத்துக்குக் காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின்போது அறிவித்தபடி டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைக்க வேண்டும். இதுபோன்ற சலுகைகளை லாரி உரிமையாளர்களுக்கு வழங்கினால் மட்டுமே இந்த தொழிலை காப்பாற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 19 மே 2021