மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

தேங்கிய காய்கறிகள்; 3,000 குடும்பங்களுக்கு வழங்கிய இளைஞர்கள்!

தேங்கிய காய்கறிகள்; 3,000 குடும்பங்களுக்கு வழங்கிய இளைஞர்கள்!

தென்காசி, பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் கடைகளில் தேங்கிக்கிடந்த சுமார் 5 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகளை 3,000 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று இளைஞர்கள் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாவூர்சத்திரத்தில் சுமார் 150 கடைகளுடன் இயங்கிவந்த காமராஜர் தினசரி மார்க்கெட் கடந்த 15ஆம் தேதி முதல் முற்றிலும் மூடப்பட்டது. இந்த நிலையில் விவசாயிகள் விளைய வைத்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் ஒருபுறம் திண்டாடி வருகின்றனர். அத்துடன் பொதுமக்களுக்குக் காய்கறிகள் கிடைக்காமலும் உள்ள சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் கீழப்பாவூர் சந்தை தோப்பு தெருவில் உள்ள இளைஞர் அணியினர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் கடைகளில் தேங்கிக்கிடந்த சுமார் 5 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகள்... உருளைக்கிழங்கு, பூசணி, தடியங்காய், வாழைக்காய், சுரைக்காய், சேம்பு, பீட்ரூட், பீன்ஸ், பால் சேம்பு, மாங்காய், தக்காளி போன்ற காய்கறிகளைக் கொண்டு வந்து வேன்களில் எடுத்துச் சென்று சுமார் 3,000 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கினர்.

இதை அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். அத்துடன் பெண்கள், ஆண்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து காய்கறிகளைப் பெற்றுச் சென்று இளைஞர்களை வாழ்த்தினர்.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

புதன் 19 மே 2021