மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

ஊரடங்கு: சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

ஊரடங்கு: சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்!

கொரோனா ஊரடங்கால் வன விலங்கு பூங்கா சாலைகளில் எந்தவித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்தவித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பூங்காவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பூங்காவுக்குச் செல்லும் சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த நிலையில், சாலைகள் வாகனங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் கூரூஜர் தேசிய பூங்காவில் உள்ள வன விலங்குகள் எந்தவித பதற்றமும் இன்றி சாலைகளில் அங்கும் இங்கும் செல்கின்றன.

அந்த வகையில், பத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் பூங்காவில் உள்ள சாலையில் படுத்து ஓய்வெடுத்தன. இதை, அப்பூங்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.

ஊரடங்கால் வன விலங்கு பூங்கா சாலைகளில் எந்தவித வாகனமும் செல்லாமல் சிங்கங்கள் எந்தவித இடையூறும் இன்றி நிம்மதியாக ஓய்வெடுப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

-ராஜ்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

புதன் 19 மே 2021