மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

தெருவிலங்குகளுக்கு உணவு : யோசனை கேட்கும் உயர் நீதிமன்றம்!

தெருவிலங்குகளுக்கு உணவு : யோசனை கேட்கும் உயர் நீதிமன்றம்!

ஊரடங்கால் உணவு இல்லாமல் தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவு அளிப்பது குறித்து யோசனை வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதுபோல், தெருவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளதால், தெருவிலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மதர்ஸ் ஆஃப் அனிமல்ஸ் அறக்கட்டளையின் தலைவரான வி.இ.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “ தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால், தெரு விலங்குகள் உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை இன்று(மே 19) நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தெரு நாய்கள் மற்றும் விலங்குகளுக்கு எப்படி உணவு, தண்ணீர் வழங்கலாம் என்பது குறித்த யோசனைகளை தெரிவிக்கும்படி, மனுதாரருக்கும், தமிழக அரசுக்கும் அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

புதன் 19 மே 2021