மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 மே 2021

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

கிச்சன் கீர்த்தனா: இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

சமைப்பதைவிட சைடிஷுக்குத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். தற்போதைய சூழலில் இருப்பதை வைத்து சமைப்பதே நல்லது என்று நினைப்பவர்களுக்கு இந்த இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு உதவும். இதை சப்பாத்தி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

என்ன தேவை?

இளம் இஞ்சி - 25 கிராம்

பிஞ்சு பச்சை மிளகாய் - 10

புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

அச்சு வெல்லம் - ஒன்று

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து நன்றாக கிளறவும். தொக்கு நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்போது கிளறி இறக்கவும். சூப்பரான இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு ரெடி.

நேற்றைய ரெசிப்பி : இறால் தொக்கு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

புதன் 19 மே 2021