மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வர வேண்டாம்!

சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வர வேண்டாம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையின் முக்கிய மீன் சந்தையான வானகரம் மீன் மார்க்கெட்டில் இனி சில்லறை விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீன் மார்க்கெட்டுகளில் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாளுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையின் முக்கிய மீன் சந்தையான வானகரம் மீன் மார்க்கெட்டில் இனி சில்லறை விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும், பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை, “கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வானகரம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இனி மொத்த விலையில் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யவும், சில்லறை விற்பனை போக்கை நிறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, நிலைமை சீரடையும் வரையில் இனி பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு மீன்கள் வாங்க நேரில் வர வேண்டாம். வியாபாரிகள் மட்டும் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து மீன்கள் வாங்கி செல்லலாம்.

மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம் என்பதால் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகம் எடுத்துள்ளது. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

செவ்வாய் 18 மே 2021