மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு திவால் செயல்முறை - ரகுராம் ராஜன்

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு திவால் செயல்முறை - ரகுராம் ராஜன்

சுதந்திர போராட்டத்துக்குப் பிறகு இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக கோவிட்-19 பெருந்தொற்று இருக்கும் என்றும், சிறு, குறு மற்றும் நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இயங்கி வரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சார்பில் சிறப்பு காணொலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் பலர் கலந்துகொண்ட அந்த காணொலிக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், டெல்லி சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பேராசிரியருமான ரகுராம் ராஜனும் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில், தீவிரமாகி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்தும் இந்திய பொருளாதாரம் குறித்தும் பேசினார்.

“இந்தியா இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு விரைவான திவால் செயல்முறை தேவை என்று நினைக்கிறேன். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக கோவிட்-19 பெருந்தொற்று இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. சமீபமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கத்தால் முடியவில்லை. இதுவும் ஒரு வகையில் கொரோனாவின் பாதிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர அரசுகள் அமல்படுத்தி இருக்கும் லாக்டௌன்களால் மிகப்பெரிய பொருளாதார சவாலினை இந்தியா மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் அரசுகளால் ஒரு அளவுக்கு மேல் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

செவ்வாய் 18 மே 2021