மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

ரிலாக்ஸ் டைம்: ஆரஞ்சு ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: ஆரஞ்சு ஜூஸ்

பழக்கப்பட்ட பழம் என்பதால் சத்தான சில பழங்களை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். தற்போதைய சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் முக்கிய பழம் ஆரஞ்சு. இதிலுள்ள தயமின், பைரிடோக்ஸின், ஃபோலேட்ஸ் நம் உடலில் தொற்று வியாதிகள் பரவாமல் பாதுகாக்கும், உடம்பைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மேலும் கோடையில் ஏற்படும் சரும வறட்சியைப் போக்கி சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ள இந்த ஆரஞ்சு ஜூஸ் உதவும்..

எப்படிச் செய்வது?

இரண்டு ஆரஞ்சுப் பழங்களை சாறு எடுத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனோடு ஐஸ் கட்டிகள், தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் போட்டுச் சுற்றினால் ஆரஞ்சு ஜூஸ் ரெடி.

சிறப்பு

ஆரஞ்சில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் இதயத் துடிப்பையும் செம்மையாக வைத்திருப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ‘பெக்டின்’ என்னும் சத்து ஆரஞ்சில் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல், கட்டிகள் வராது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 18 மே 2021