மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 மே 2021

கிச்சன் கீர்த்தனா: இறால் தொக்கு

கிச்சன் கீர்த்தனா:  இறால் தொக்கு

கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தைத் தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் சி, நல்ல வகையான கொழுப்பு மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகள் கொண்ட உணவை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் வைட்டமின் ‘டி’யும் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இந்த இறால் தொக்கு உதவியாக இருக்கும்.

என்ன தேவை?

இறால் - 250 கிராம் (சுத்தம் செய்தது)

பெரிய வெங்காயம் - 3

சீரகம் - ஒரு டீஸ்பூன்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி, இறாலையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இத்துடன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கொத்தமல்லித்தழை, சேர்க்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.

இறால் வேகும்போது அதில் இருந்து வெளிவரும் தண்ணீரே இறால் வேக போதுமானது. தேவைப்படுவோர், ஒரு குழிக்கரண்டி தண்ணீரும் சேர்த்து வேகவிடலாம். வேகவிடும்போது அடுப்பைக் குறைத்து வைத்து தொக்கு பதம் வரும்வரை மூடி போட்டு வெந்ததும் இறக்கினால் இறால் தொக்கு ரெடி.

நேற்றைய ரெசிப்பி : மட்டன் தொக்கு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

செவ்வாய் 18 மே 2021