மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

கோவிஷீல்டு: 84 நாட்களுக்குப் பிறகே ஆன்லைனில் முன்பதிவு!

கோவிஷீல்டு: 84 நாட்களுக்குப் பிறகே ஆன்லைனில் முன்பதிவு!

கோவிஷீல்டு தடுப்பூசி இடைவெளி அதிகரிக்கப்பட்டதற்கேற்ப கோவின் இணையதளம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு செல்லுபடியாகும் எனவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியுடன் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதற்கான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 12 - 16 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கால இடைவெளியை நடைமுறைப்படுத்தும் விதமாக கோவின் இணையதளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று (மே 16) மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்வதற்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, கோவின் இணையதளத்திலும் தேவையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆன்லைனில் முன்பதிவு செய்து, 84 நாள் இடைவெளிக்கு முன்பே வருபவர்கள், திருப்பி அனுப்பப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே செய்த முன்பதிவு செல்லுபடியாகும். அவற்றை கோவின் இணையதளத்தில் ரத்து செய்யப்படவில்லை. அத்தகைய முன்பதிவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மதிக்க வேண்டும். ஏற்கனவே முன்பதிவு செய்த பயனாளிகள், இரண்டாவது டோஸ் போட வந்தால், அவர்களைத் திருப்பி அனுப்பக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள், தங்கள் முன்பதிவு தேதியை முதல் டோஸ் போட்ட தேதியிலிருந்து, 84 நாட்களுக்குப்பின் தேதியில் மாற்றிக் கொள்ளலாம்.

இனிமேல் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் செலுத்திக்கொள்வதற்கு ஆன்லைன் மூலம் பயனாளிகள் 84 நாட்களுக்கு குறைவாக முன்பதிவு செய்ய முடியாது. இந்த மாற்றம் குறித்து பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 17 மே 2021