மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ரயில்வே போலீசாரின் முயற்சிக்கு மக்கள் வரவேற்பு!

ரயில்வே போலீசாரின் முயற்சிக்கு மக்கள் வரவேற்பு!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் நீராவி பிடிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் ரயில்வே காவல்துறையினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சுவாசக்கோளாறு பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் ஆவி பிடித்தல் போன்ற இயற்கை முறை சிகிச்சை சுவாசக் கோளாறு பிரச்சினையைச் சரிசெய்யும் என இயற்கை மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதை பெரும்பாலான மக்களும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணிகள் நீராவி பிடிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளை ரயில்வே காவல்துறையினர் செய்துள்ளனர். வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி, மிளகு உள்ளிட்ட 12 மூலிகைகள் கொண்டு ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 நீராவி பிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் சமூக இடைவெளி விட்டு 10 பேர் ஆவி பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஆவி பிடித்த பிறகு முறையாக கிருமி நாசினி கொண்டு நீராவி இயந்திரம் சுத்தம் செய்யப்படுகிறது. நீராவி பிடிப்பவர்களுக்கு கபசூர குடிநீரும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த ரயில்வே காவல்துறை எஸ்பி பழனிக்குமார் கூறுகையில், “ஆவி பிடிப்பதால் சுவாசப் பிரச்சினைகள் நீங்கும் என இயற்கை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

ரயில்வே காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நீராவி பிடிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 17 மே 2021