மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

வியாபாரிகள் வாங்க மறுப்பு: நடுரோட்டில் புடலங்காய்கள்!

வியாபாரிகள் வாங்க மறுப்பு: நடுரோட்டில் புடலங்காய்கள்!

கடுமையாக உழைத்து உற்பத்தி செய்த புடலங்காய்களை வியாபாரிகள் வாங்க மறுத்ததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் சாலையில் கொட்டிய சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வாழப்பாடி தினசரி மண்டிக்கு புடலங்காய் மூட்டைகளை ஆத்தூர் கொத்தாம்பாடி அடுத்த சிவகங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசுப்ரமணியம் என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்தார்.

அங்கு மண்டியில் இருந்த வியாபாரிகள், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தங்களால் காய்கறிகளை வாங்கி விற்க முடியாது என்று அவரிடம் புடலங்காய்களை வாங்க மறுத்துள்ளனர். இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார்.

இதையடுத்து அவர் மூன்று மூட்டைகளில் கொண்டுவந்திருந்த புடலங்காய்களை எடுத்துச்சென்று, வாழப்பாடி பஸ் நிலையம் அருகே, நடுரோட்டில் கொட்டி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

இதைபார்த்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் போட்டி போட்டு அந்த காய்களை அள்ளிச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து காய்களை கொட்டிய விவசாயி சிவசுப்ரமணியம் மற்றும் காய்கறிகளை அள்ளுவதற்கு குவிந்த பொதுமக்களையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடுமையாக உழைத்து உற்பத்தி செய்த காய்கறிகள் விலை போகாததால் விரக்தி அடைந்த விவசாயி, புடலங்காய்களை சாலையில் கொட்டிய சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

திங்கள் 17 மே 2021