மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 மே 2021

ரிலாக்ஸ் டைம்: அவல் மோர்க்கூழ்

ரிலாக்ஸ் டைம்: அவல் மோர்க்கூழ்

மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது. தினமும் மோர் குடித்தால் அது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும். தயிரைக் கடைந்து மோராகக் குடிப்பதைவிட அவல் சேர்த்து குடித்தால் இந்தக் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கப் தயிரில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அரை டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் உடைத்த உளுந்து தாளித்து ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, தோலுரித்துப் பொடியாக நறுக்கியது கால் கப் சின்ன வெங்காயம், கீறிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் இஞ்சித்துருவல், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு சேர்த்துக் கிளறி, மூன்று டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் சிறிதளவு கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

சிறப்பு

கால்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைச் சரிசெய்யும்.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

திங்கள் 17 மே 2021