மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

ஆதாரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை வழக்கில் சேர்க்கலாம்!

ஆதாரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை வழக்கில் சேர்க்கலாம்!

குற்றச்செயலில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில் குற்ற வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவரின் உறவினர்களான பூங்கனி, குரு பாண்டியன் மற்றும் தாமரைச் செல்வி ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்க கோரி பெண்ணின் தாய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம் மூன்று பேரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்த்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து பூங்கனி உள்பட மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (மே 15) நீதிபதி வேல்முருகன் முன்பு வந்தது. அப்போது, குற்றச்செயலில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் இருந்தால், வழக்கு விசாரணை எந்த நிலையில் இருந்தாலும், தொடர்புடையவர்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கலாம். அதற்கு, குற்ற விசாரணை முறைச் சட்டம் 319ஆவது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

அதனால், புதிதாகச் சேர்க்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சேர்த்து, இந்த வழக்கை விசாரிக்கும்படி மகளிர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்திய நீதிபதி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 16 மே 2021