மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

இன்று முதல் ஆவின் பால் விலை குறைகிறது!

இன்று முதல் ஆவின் பால் விலை குறைகிறது!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7ஆம் தேதி ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இரண்டாவது அறிவிப்பான ஆவின் பால் விலை குறைப்பு இன்று (மே 16) முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கும், இன்று முதல் விற்பனை செய்யப்படும். டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்கப்படும்.

பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டைதாரர்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21-க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18-க்கும் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் 25 லட்சம் லிட்டர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை இதனால் இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஞாயிறு 16 மே 2021