மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

ஆக்சிஜன் ரயில் : இரண்டு அதிகாரிகள் நியமனம்!

ஆக்சிஜன் ரயில் : இரண்டு அதிகாரிகள் நியமனம்!

ஒடிசா மாநிலத்திலிருந்து ஆக்சிஜனை தமிழகத்துக்கு கொண்டுவர தமிழக அரசு இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தமிழகத்தில் ஸ்டெர்லைட்,என்எல்சி உள்ளிட்ட இடங்களில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வந்தாலும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆக்சிஜன் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, ஏற்கனவே இரண்டு ஆக்சிஜன் ரயில்கள் மூலம் 111.4 டன் ஆக்சிஜன் தமிழகத்துக்கு வந்த நிலையில் மூன்றாவதாக ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து 40 டன் ஆக்சிஜனுடன் விரைவு ரயில் இன்று சென்னை வரவுள்ளது.

அடுத்தபடியாக ஒடிசா மாநிலம் ரூர்கேலா, புவனேஸ்வர் பகுதிகளில் இருந்து 110 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவிலிருந்து ஆக்சிஜனை கொள்முதல் செய்வதற்காக ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

அதன்படி நியமிக்கப்பட்ட சேலம் வன பாதுகாவலர் பெரியசாமி, வேளாண்துறை அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் ரூர்கேலா, புவனேஸ்வரில் தங்கியிருந்து ஆக்சிஜனை தமிழகத்துக்கு கொண்டுவரும் பணிகளை கவனித்து கொள்வார்கள்.

கடந்த 24 நாட்களில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட 13 மாநிலங்களுக்கு 777 டேங்கர்களில் 14, 294 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

ஞாயிறு 16 மே 2021