மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

போதியளவு இருக்கு, தடுப்பூசி போட்டுக்கோங்க!

போதியளவு இருக்கு, தடுப்பூசி போட்டுக்கோங்க!

போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைந்திருக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “இன்று பயன்பாட்டுக்கு வந்த பள்ளியில் 104 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி உள்ளன. இங்கு, 7மருத்துவர்கள், 24 செவிலியர்கள், 24மணி நேரமும் செயல்படுவார்கள்.

சென்னையில் படுக்கை பற்றாக்குறையை குறைக்க லயோலா கல்லூரியிலும், ஈச்சம்பாக்கம் மற்றும் பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கவுள்ளோம். இதுவரை தடுப்பூசியின் முதல் தவணை கூட செலுத்தாதவர்களின் பட்டியலை தயார் செய்து வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்று பேசினார்.

இதையடுத்து பேசிய ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்று 20,000 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் 40 சதவிகிதம் பேர்தான் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போது போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

மே 5ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 200 வார்டுகளிலும், ஒரு வார்டிற்கு இரண்டு காய்ச்சல் முகாம்கள் என 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 1,29,324 முகாம்கள் நடத்தப்பட்டு, 65,92,859 நபர்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களில் 18,46,773 நபர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, பல்வேறு இடங்களில் தடுப்பூசி இல்லாமல் வந்த மக்களை திரும்பி அனுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநகராட்சியே தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

ஞாயிறு 16 மே 2021