மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

சாலையே நெற்களம்; தீர்வு எப்போது?

சாலையே நெற்களம்; தீர்வு எப்போது?

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள சாலைகளையே நெற்களமாகப் பயன்படுத்தி வரும்நிலையில், விரைவில் நெற்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு தாலுகாவுக்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அறுவடை சீசன் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் இல்லாததால் இந்தப் பகுதி விவசாயிகள் வத்திராயிருப்பு புதிய பஸ் நிலையத்தையும், வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையையும், வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையையும் விவசாயிகள் நெற்களமாக மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள விவசாயிகள், “வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்தப் பகுதியில் நெற்களம் இல்லாததால் சாலைகளிலும், பஸ் நிலையங்களிலும் உலர வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து கொடுத்தால் நாங்கள் பெரிதும் பயன்பெறுவோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.

மேலும், மழை காலங்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள நெல் சேதம் அடைந்து வருவதாகவும், இதனால் குறைந்த விலைக்கே நெல் விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

ஞாயிறு 16 மே 2021