மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

ரெம்டெசிவிர்: மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

ரெம்டெசிவிர்: மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாதவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மற்ற மாநிலங்களில் ஆக்சிஜனுக்காக மக்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதுபோல், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் அலைகிறார்கள். ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்து அல்ல என மருத்துவர்கள்,நிபுணர்கள் என அனைவரும் கூறிய பிறகும் மக்கள் மருந்துக்காக வரிசையில் காத்திருப்பது குறையவில்லை. இதற்கு மத்தியில் கள்ளசந்தையிலும் இம்மருந்து அதிகவிலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுப்பதற்காக, கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில்,இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ரெம்டெசிவிர் மருந்தை தேவையுள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். தேவையில்லாதவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை எழுதிக் கொடுப்பதால் மக்கள் கூட்டம் கூடுகின்றனர். இது நோய் தொற்று பரவ வழிவகுக்கும்.

பொதுமக்களும் இதிலுள்ள சிரமத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மத்திய அரசு, தமிழகத்துக்கு 7 ஆயிரம் ரெம்டெசிவிர் வயல்கள் மட்டுமே அனுப்புகிறது. அதில் அரசு மருத்துவமனைகளுக்கு முதலில் ஒதுக்கப்படுகிறது. பின்பு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் இந்த மருந்தை பெற்றிட கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு கவுண்ட்டர்கள் உருவாக்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மருந்து வாங்க மக்கள் வருவதால், கோவை, சேலம், திருச்சி, நெல்லை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டது. அங்கேயும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக செல்கின்றனர். மக்களும் இதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதனால், ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்ய இருக்கிறோம். மத்திய சுகாதார அமைச்சருடன் நடந்த காணொலி கூட்டத்தில், ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி பெருக்கப்பட்டு, மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் அளவு விரைவில் அதிகரிக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் ரெம்டெசிவிர் அளவு அதிகரிக்கும்போது இந்த பிரச்சினையை சமாளிக்க முடியும்.

மயானங்களில் பணியாற்றுபவர்களும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும். மயான பணியாளர்கள் இந்த கொரோனா காலத்தில் சந்திக்கும் பிரச்சினை குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 16 மே 2021