மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

வேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கொரோனா!

வேலூரில் ஆட்சியர், எம்எல்ஏவுக்கு கொரோனா!

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 300ஐ கடந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீப காலமாக மாவட்ட ஆட்சியர்களிடையே கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையில் மாவட்ட ஆட்சியர் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஆட்சியர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது எம்எல்ஏ நந்தகுமார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆட்சியருக்கும், எம்எல்ஏவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் எஸ்.பி. செல்வகுமாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

ஞாயிறு 16 மே 2021