மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

ரிலாக்ஸ் டைம்: வெர்ஜின் மொஜிட்டோ!

ரிலாக்ஸ் டைம்: வெர்ஜின் மொஜிட்டோ!

தாய்லாந்து தெருக்கடைகளில் மிகவும் பிரபலமானது மொஜிட்டோ பான வகைகள். மது வகைகள் சேர்க்கப்படாத கலவையை வெர்ஜின் மொஜிட்டோ என்பார்கள். இந்த வெர்ஜின் மொஜிட்டோவை எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடையைக் கொண்டாடலாம்.

எப்படிச் செய்வது?

கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளவும். அதில் எலுமிச்சைப்பழக் கீற்றுகள் மூன்று, புதினா இலைகள் சிறிதளவு, உப்பு ஒரு சிட்டிகை, எலுமிச்சைப்பழச்சாறு அரை டீஸ்பூன், சர்க்கரைத்தண்ணீர் இரண்டு டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்க்கவும். இதை மத்தின் காம்பு கொண்டு மிக மென்மையாக மூன்று முறை நசுக்கவும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்து நசுக்கக் கூடாது. அப்படி அழுத்தினால் கசப்புச்சுவை அதிகமாகிவிடும். புதினா இலைகளும் எலுமிச்சையும் லேசாக நசுங்கி அவற்றின் சாறு இறங்கினால் போதும். பிறகு அதில் 250 மில்லி குளிர்ந்த சோடா ஊற்றி, எலுமிச்சை ஸ்லைஸாஸ் அலங்கரித்துப் பரிமாறவும்.

சிறப்பு

உடனடி புத்துணர்ச்சி தரும். சருமத்தைப் பொலிவாக்கும். செரிமான பிரச்சினைகளைச் சரி செய்யும்.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 16 மே 2021