மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 மே 2021

‘கையெடுத்து கும்பிடுகிறேன்’... தயவுசெய்து நிறுத்துங்கள்!

‘கையெடுத்து கும்பிடுகிறேன்’... தயவுசெய்து நிறுத்துங்கள்!

கோவிஷீல்ட் இரண்டாவது டோஸுக்கான இடைவெளி குறித்த சர்ச்சையை நிறுத்துங்கள், கையெடுத்து கும்பிடுகிறேன் என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களும் குறிப்பிட்ட இடைவெளியுடன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், கோவிஷீல்டின் இரண்டாவது டோஸுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு, முதலில் நான்கு வாரம் இடைவெளி அளிக்கப்பட்டது. பின்னர் 6 - 8 வாரமாக்கப்பட்டது. தற்போது 12 - 16 வாரமாக மாற்றப்பட்டுள்ளது. அடுத்து, தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டாலே போதும், இரண்டாவது டோஸ் தேவைப்படாது என்பார்கள். இறுதியாக தடுப்பூசியே போடவில்லையா, பரவாயில்லை... பிளாஸ்மாவை தானம் செய்யுங்கள்” என்று சொல்வார்கள் என்று தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் இதுபோன்ற விமர்சனங்கள் உலவி வந்தன. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவே இந்த இடைவெளி அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிஷீல்டின் இரண்டாவது டோஸுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களுக்கு நீட்டிக்கும் முடிவு, எந்தவொரு அழுத்தமும் இல்லாமல், விஞ்ஞான அமைப்பு எடுத்த ஒரு சுயாதீனமான முடிவு. கோவிஷீல்ட் இரண்டாவது டோஸுக்கான இடைவெளி குறித்த சர்ச்சையை நிறுத்துங்கள், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. ஒரு விஞ்ஞானியாக, ஒரு நிபுணராக, நான் உங்களை கையெடுத்து கும்பிட்டு வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு இது. தற்போது, இங்கிலாந்தில் மூன்று மாத இடைவெளியில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது டோஸ் வழங்கப்படுகிறது. இடைவெளியை அதிகரிப்பதனால், எந்தவித பாதிப்பும் இருக்காது என்பதற்கான ஆதாரம் நம் கண்முன்னே இருக்கிறது. இது நோய் பாதுகாப்பில் 60-85 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும். அதனால், தற்போது இந்த இடைவெளியை செயல்படுத்தும் நம்பிக்கை எங்களுக்குக் கிடைத்தது. அதனால்தான், கோவிஷீல்டு இரண்டாவது டோஸுக்கான இடைவெளியை விரிவாக்க முடிவு செய்தோம்.

ஒரு விஞ்ஞானியாகவும் ஒரு நிபுணராகவும் உங்களிடம் மன்றாடுகிறேன். நம்முடைய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை மதிக்க வேண்டும். அறிவியல் வளர்ந்து வருகிறது. SARS-CoV-2 பற்றிய அறிவியல் அறிவில், நமக்கு 1.5 வயது மட்டுமே. அதனால், புதிதாக தகவல்கள் வெளிவரும்போது, அடுத்து நாம் என்ன கற்று கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 16 மே 2021